dinamalar telegram
Advertisement

ஆச்சார்யா கல்விக் குழுமம் ஏ.பி.இ., நிறுவனத்துடன் ஒப்பந்தம்

Share
புதுச்சேரி-ஆச்சார்யா கல்விக் குழுமம், ஏ.பி.இ., செமிகண்டக்டர் டிசைன் நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.ஆச்சார்யா கல்விக் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை;ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர்கள் படிக்கும்போதே வேலை வாய்ப்பு பெறும் வகையில், பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பை அதிகரிக்க, பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது.செயற்கை நுண்ணறிவு, கிளவுட் ஆர்க்கிடெக்சர், தரவு அறிவியல் மற்றும் பகுப்பாய்வு, இணைய சிந்தனை ஆகியவற்றில் சான்றிதழ் படிப்பு அளிக்கப்படுகிறது.மேலும், தொழில்முனைவோர், டேலி, மெடிக்கல் கோடிங், சில்லரை வர்த்தக பயிற்சி, டயாலிசிஸ் உள்ளிட்ட சான்றிதழ் படிப்பு அளிக்கப் படுகிறது.இதன் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவு என்ற சான்றிதழ் படிப்பிற்கு, ஆச்சார்யா கல்விக் குழும மேலாண் இயக்குநர் அரவிந்தன், ஏ.பி.இ., செமிகண்டக்டர் டிசைன் மேலாண் இயக்குநர் ஆத்தீப் ஷா, இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.இதன் வாயிலாக மாணவர்களுக்கு, அப்பாடப்பிரிவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement