dinamalar telegram
Advertisement

தடுப்பூசி போட்டால் ரூ. 50 பரிசு

Share
திட்டக்குடி-ஆலத்துார் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி போட முதலில் வரும் 50 பேருக்கு தலா 50 ரூபாய் பரிசு வழங்குவதாக ஊராட்சி தலைவர் அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.கடலுார் மாவட்டம், மங்களூர் ஒன்றியம், ஆலத்துார் ஊராட்சியில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் பெரும்பான்மையான பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், 225பேர் இதுவரை போடாமல் உள்ளனர்.இவர்களுக்கும் தடுப்பூசி போட்டால் 100சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திய ஊராட்சியாக ஆலத்துார் மாறும். இதற்காக இன்று நடக்க உள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில், தடுப்பூசி போட்டுக்கொள்ள முதலில் வரும் 50 பேருக்கு தலா 50 ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஊராட்சிதலைவர் மல்லிகை வேல்முருகன் அறிவித்து, அதை தண்டோரோ மூலம் ஊர் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினர்.கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் நபர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பரிசு அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement