dinamalar telegram
Advertisement

முதலைஇழுத்துச் சென்ற முதியவர் உடலை தீயணைப்பு துறையினர் மீட்பு

Share
சிதம்பரம்-சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை இழுத்துச் சென்ற முதியவர் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பழைய நல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 65; தி.மு.க., கிளை செயலாளர். இவர் நேற்று முன்தினம் இரவு கை கால் கழுவ ஆற்றில் இறங்கினார். அப்போது முதலை கடித்து இழுத்து சென்றது. தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் படகில் சென்று நீண்ட நேரம் தேடினர்.நேற்று கோபாலகிருஷ்ணன் உடலோடு திடீரென முதலை வெளியேறி வேறு இடத்திற்கு சென்றது. படகில் விரட்டியபடி தீயணைப்பு வீரர்கள் சென்று, உடலை மீட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது சகோதரர் அறிவானந்தம் என்பவரும் முதலை கடித்து இழுத்து சென்று இறந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நேற்று காலை மாவட்ட வன அலுவலர் செல்வம், பாதிக்கப்பட்ட கோபாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு, அரசு நிவாரண தொகை ரூ. 50 ஆயிரம் வழங்கினார். சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் அஜிதா, வனக்காப்பாளர் அனுசுயா உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement