dinamalar telegram
Advertisement

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

Share
ரிஷிவந்தியம்-பகண்டைகூட்ரோட்டில் குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி இறந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோட்டைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் குபேந்திரன் 9; தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று மதியம் 12:30 மணியளவில், குபேந்திரன் தனது நண்பர்களுடன் குளத்துமேட்டுத் தெருவில் உள்ள குளத்தில் குளித்து கொண்டிருந்தார்.அப்போது, ஆழமான பகுதியில், குபேந்திரன் நீரில் மூழ்கினார். சக சிறுவர்கள் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்றவர்கள் குபேந்திரனை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்ததில், ஏற்கனவே குபேந்திரன் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement