dinamalar telegram
Advertisement

கத்தி முனையில் ரூ.30 லட்சம் கொள்ளை பட்டப் பகலில் மர்ம நபர்கள் துணிகரம்

Share
மரக்காணம்-திண்டிவனம் அருகே காரை வழிமறித்து, கத்தி முனையில் வியாபாரியிடம் 30 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜா, 32; வெள்ளரிக்காய் வியாபாரி. அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன், 32; சிபிசக்கரவர்த்தி, 34; இருவரும் ராஜாவிடம் வேலை செய்து வருகின்றனர்.மூவரும் நேற்று, ஆத்துாரில் இருந்து விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் உள்ள விவசாயிகளிடம் வெள்ளரிக்காய் பயிரிட பணம் பட்டுவாடா செய்ய ராஜாவுக்கு சொந்தமான 'ஸ்கார்பியோ' காரில் வந்து கொண்டிருந்தனர். காரை கிருஷ்ணன் ஓட்டினார்.காலை 8:00 மணிக்கு திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் ஏரிக்கரை அருகே வந்தனர். அப்போது பின் தொடர்ந்து கே.டி.எம்., பைக் மற்றும் 3 பல்சர் பைக்குகளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து நிறுத்தினர். பின், கார் சைடு கண்ணாடியை உடைத்து ராஜாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, காருக்குள் இருந்த 30 லட்சம் ரூபாயை பறித்து தப்பிச் சென்றனர்.பட்டப் பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்தை எஸ்.பி., ஸ்ரீநாதா பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.இது குறித்து ராஜா அளித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய 8 பேர் கொண்ட கொள்ளை கும்பலைத் தேடி வருகின்றனர். மேலும், ஆத்துாரில் இருந்து மர்ம கும்பல் காரை பின் தொடர்ந்து வந்தார்களா என டோல்கேட்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.போலீசாருக்கு சந்தேகம்வெள்ளரிக்காய் வியாபாரத்திற்கு 30 லட்சம் ரூபாய் எடுத்து வரப்பட்டதா? உள்ளாட்சித் தேர்தலுக்காக அரசியல்வாதிகளுக்கு கொடுக்க கொண்டு வந்த பணமா? இல்லை ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்காக கொண்டு வந்த பணமா என்ற சந்தேகம் போலீசாரிடையே எழுந்துள்ளது. இதனால், பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement