dinamalar telegram
Advertisement

பொய் பரப்புரைகளை நம்ப வேண்டாம்!

Share
சென்னை:'தற்கொலைக்கு துாண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி, விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள்' என, பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

அவரது அறிக்கை:மாணவர்களே உங்கள் கனவை மேலும் விரிவாக்குங்கள். மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்காவிட்டால், உலகம் இருண்டு போகப் போவதில்லை. விடா முயற்சியும், திறமையும் இருந்தால், பணமில்லாத ஏழைக்கும் வெற்றி நிச்சயம்.

தற்கொலைக்கு துாண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி, விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள்.உங்களால் தேர்ச்சி பெற முடியாவிட்டால், உங்கள் பயிற்சி முறையிலோ, பாடத்திட்ட முறையிலோ, தேர்வுக்கு தயாராகும் முறையிலோ மாற்றம் தேவைப்படுகிறது என்பதை உணருங்கள்.உங்களை நேசிக்க துவங்குங்கள். புத்தகங்களை வாசிக்க துவங்குங்கள்.
பெரியோரிடம் அறிவுரைகளை யாசிக்க துவங்குங்கள். தேர்வுகளை கடப்பது எப்படி என யோசிக்க துவங்குங்கள். படிப்பின் மீது பிடிப்போடு இருங்கள். நாளைய உலகம் உங்களுடையது.இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement