dinamalar telegram
Advertisement

ரூ.30 கோடி மதிப்பிலான சிறுதாவூர் பங்களா முடக்கம்

Share
சென்னை:சசிகலாவை தொடர்ந்து, சிறுதாவூர் பங்களா வளாகத்தில் உள்ள அவரது உறவினர் சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை, வருமான வரித்துறை முடக்கி உள்ளது.


சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில், 2017ல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்புஇதில், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சொந்தமான இடங்களும் அடங்கும்.ஐந்து நாட்கள் நீடித்த சோதனையில், சசிகலா குடும்பத்தினர் 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை துவக்கி, 1,500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சொத்துக்களில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் சோதனையில் சிக்கின. அந்த ஆவணங்களின் அடிப்படையில், சொத்துக்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.இதன்படி, 2019ல் 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. தொடர்ந்து, 2020ல் 300 கோடி ரூபாய் மதிப்பிலான 65 சொத்துக்கள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டன.

பினாமி சட்டம்அதில், சென்னை, போயஸ் தோட்டத்தில் வேதா நிலையம் எதிரே 22 ஆயிரத்து 460 சதுர அடி நிலத்தில், கட்டப்பட்டு வரும் கட்டடமும் அடங்கும்.சமீபத்தில், செங்கல்பட்டு மாவட்டம் பையனுாரில் உள்ள, சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவை, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த 8ம் தேதி வருமானவரித் துறை முடக்கியது.

தற்போது சுதாகரனுக்கு சொந்தமான நிலங்கள், பினாமி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டு ள்ளன. இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:சசிகலா உட்பட அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், அவரது சொத்துக்கள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, சுதாகரனுக்கு சொந்தமான, செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூரில் உள்ள 30 கோடி ரூபாய் மதிப்பிலான 21 ஏக்கர் நிலம் முடக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள், இந்த சொத்தின் வாயிலாக ஆதாயம் பெறவோ, பிறருக்கு மாற்றவோ கூடாது.இது குறித்து, பெங்களூரு சிறையில் உள்ள சுதாகரனுக்கும், ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா, மகன் தீபக் மற்றும் திருப்போரூர் சார் - பதிவாளர் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement