dinamalar telegram
Advertisement

அமைச்சர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாதம் 2 முறை ஆய்வு செய்வேன்: ஸ்டாலின்

Share
Tamil News
சென்னை:''சட்டசபையில் அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, மாதம் இரண்டு முறை ஆய்வு செய்வேன்,'' என, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க., முப்பெரும் விழா, சென்னை அறிவாலயத்தில் நடந்தது. உரிமைவிழாவில், ஈ.வெ.ராமசாமி விருது - மிசா மதிவாணனுக்கும்; அண்ணாதுரை விருது - மூக்கையாவுக்கும்; கருணாநிதி விருது - வேணுவுக்கும்; பாவேந்தர் விருது - வாசுகி ரமணனுக்கும்; அன்பழகன் விருது முபராக்கிற்கும் வழங்கப்பட்டது.

விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க.,வில் உழைத்த முன்னோடிகளுக்கு விருது வழங்கும் விழாவை, 1985ல் கருணாநிதி துவக்கினார். ஈ.வெ.ராமசாமி என்றால் சமூக நீதி. அண்ணாதுரை என்றால் மாநில உரிமை. கருணாநிதி என்றால் ஒடுக்கப்பட்டோர் உரிமை. பாவேந்தர் பாரதிதாசன் என்றால் மொழிப்பற்று. அன்பழகன் என்றால் இனமானம். இதுதான் இந்த கட்சியின் கொள்கை. இதை கடைப்பிடித்து தான் நாம் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில், தி.மு.க., 6வது முறையாக ஆட்சி அமைத்திருக்கிறது. தி.மு.க., ஆட்சி என்பது எந்த பலனும் எதிர்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால் விளைந்தது. உறுதிகடந்த நான்கு மாத ஆட்சியில், நாட்டிற்கு நாம் நல்லவர்கள், வல்லவர்கள், கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுபவர்கள், சொன்னதை செய்வர்கள் என்ற நல்ல பெயரை மக்களிடம் வாங்கியுள்ளோம்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இனி ஒவ்வொரு துறைகளிலும் விடியல் பிறக்கும். இன்னும் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். சட்டசபையில் அமைச்சர்கள் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, துறை வாரியாக, மாதம் இரண்டு முறை ஆய்வு பணிகளை மேற்கொள்வேன்.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும் போது, 60, 70 சதவீதம் வெற்றி பெற்றோம்; ஆளுங்கட்சியாக இருப்பதால், நுாற்றுக்கு நுாறு சதவீதம் வெற்றி உறுதி. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement