dinamalar telegram
Advertisement

நர்சிங் மாணவியர் 46 பேருக்கு தொற்று

Share
கோவை: கோவை, சரவணம்பட்டியில், தனியார் நர்சிங் கல்லுாரி ஒன்று இயங்கி வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன், இங்கு பயிலும் மாணவியர் 46 பேருக்கு, திடீரென கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கேரளாவில் இருந்து வந்த மாணவியர் நால்வர், தனிமைப்படுத்தப்படாமல் பிற மாணவியருடன், ஒரே வகுப்பறையில் ஒன்றாக அமர வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, சக மாணவியருக்கு தொற்று பரவியுள்ளது தெரிந்தது.

பாதிக்கப்பட்ட மாணவியர், கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்த தவறிய நர்சிங் கல்லுாரியிடம் விளக்கம் கேட்டு, மாநகராட்சி சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கோவையில் தொற்று அதிகரித்து வருவதை யடுத்து, விடுமுறை நாட்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement