dinamalar telegram
Advertisement

தி.மலையில் இன்று தினகரன் மகள் திருமணம்

Share
திருவண்ணாமலை:தினகரன் மகள் திருமணம், இன்று திருவண்ணாமலையில் நடக்கிறது.

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், அனுராதா தம்பதி மகள் ஜெயஹரிணி, தஞ்சாவூர் மாவட்டம், பூண்டியைச் சேர்ந்த ராமநாதன் வாண்டையார் ஆகிய இருவருக்கும் இன்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னிதியில் திருமணம் நடக்கிறது.

இதையொட்டி நேற்று மாலை, திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. சசிகலா, இளவரசி, உறவினர்கள் பாஸ்கரன், சுதாகரன், சிவகுமார், வெங்கடேஷ், நடிகர் பிரபு, அவரது அண்ணன் ராம்குமார், தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் மற்றும் அ.ம.மு.க., மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement