dinamalar telegram
Advertisement

என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை

Share
மதுரை:என்.ஐ.ஏ., அதிகாரிகள் மதுரையில் நேற்று விசாரணை நடத்தினர்.

இலங்கையில் இருந்து தமிழகம் வழியாக போலி பாஸ்போர்ட் மூலம் கனடாவுக்கு செல்ல திட்டமிருந்த 37 இலங்கை தமிழர்கள், கர்நாடக மாநிலம், மங்களூரில் கடந்த ஜூனில் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை - என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது.

முக்கிய குற்றவாளியான புரோக்கர் துாத்துக்குடியை சேர்ந்த அலங்கார் சாக்ரடீஸ் மதுரை சிறையில் உள்ளார். இவரை நேற்று முன்தினம், ஏழு நாட்கள் காவலுக்கு எடுத்த அதிகாரிகள், நேற்று காலை இடையப்பட்டி இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.தொடர்ந்து, அவரை பெங்களூரு அழைத்துச் சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement