dinamalar telegram
Advertisement

அமைச்சர்கள் மீதான வழக்கு வக்கீல்கள் வாதம்

Share
ஸ்ரீவில்லிபுத்துார்:வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, தமிழக அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனு மீது, ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் வாதம் நடந்தது

கடந்த 2006 - 2011 தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த, தற்போதைய அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அ.தி.மு.க., ஆட்சியில், ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதிலிருந்து விடுவிக்க கோரி, அமைச்சர்கள் இருவரும் மனு செய்திருந்தனர்.

ஆக., 27ல் அமைச்சர்கள் தரப்பில் தி.மு.க., - எம்.பி., இளங்கோ ஆஜராகி வாதாடினார். பதிலளிக்க, அரசு தரப்பு வழக்கறிஞர் அழகர் கால அவகாசம் கேட்டார். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வழக்கறிஞர்களும் வாதாடினார். பின், விசாரணையை அக்., 23க்கு முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் ஒத்தி வைத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement