dinamalar telegram
Advertisement

எம்.எல்.ஏ., மனைவிக்கு பிடிவாரன்ட்

Share
மதுரை:மதுரையில் கே.எல்.கே., நிதி நிறுவனத்தில் பலர் முதலீடு செய்து ஏமாந்தனர். இது தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., அறிவழகன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கு, மதுரை முதலீட்டாளர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் சாட்சியம் அளிக்க கோரி, திருச்சி, மணச்சநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., கதிரவனின் மனைவி ஆனந்தலட்சுமி, மாமியார் மற்றும் பாட்டி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மூவரும் ஆஜராகவில்லை.

அவர்களுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி ஹேமந்த்குமார் நேற்று உத்தரவிட்டார். இதே வழக்கில், சாட்சியம் அளிக்க வராத, ஓய்வு பெற்ற நீதிபதி துவாரகா நாத் உறவினர்கள் மூவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement