dinamalar telegram
Advertisement

பலாத்கார வாலிபருக்கு 20 ஆண்டு

Share
Tamil News
கடலுார்: கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே செவ்வேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை, 22; இவர், 15 வயது சிறுமியை 2019 ஏப்., 12ல் பைக்கில் கடத்தி சென்று பலாத்காரம் செய்தார். அவரது நண்பர்கள் மாயவேல், பிரதாப், சரத்பாபு உடந்தையாக இருந்தனர். திட்டக்குடி போலீசார் நால்வரையும் கைது செய்து, சிறுமியை மீட்டனர்.

நால்வர் மீதும், கடலுார் 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. சின்னதுரைக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். நண்பர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement