dinamalar telegram
Advertisement

பள்ளி திறப்பு எப்போது? அமைச்சர் மகேஷ் தகவல்!

Share
திருச்சி:''பள்ளியில், அனைத்து வகுப்புகளையும் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

திருச்சியில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், அனைத்து வகுப்புகளையும் திறப்பது தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் அறிக்கை தயாரித்துள்ளனர். அது, முதல்வரிடம் அளிக்கப்படும்.அதன் அடிப்படையிலும், சுகாதாரத்துறை வல்லுனர்கள் அறிவுறுத்தல் அடிப்படையிலும், அனைத்து வகுப்புகளையும் திறப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார்.

பாதிப்புகளை பொறுத்தே, சி.இ.ஓ.,க்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எதுவாக இருந்தாலும், சுகாதார வல்லுனர் குழுவின் முடிவின்படியே, முதல்வர் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பார். கொரோனா ஊரடங்கு செப்., 30 வரை உள்ளது. அதற்குள் பல கட்ட ஆலோசனைகள் நடத்தி, முடிவு அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement