dinamalar telegram
Advertisement

சில வரி செய்தி

Share
ரூ.30 லட்சம் கொள்ளை

மரக்காணம்: சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்தவர் ராஜா, 32; வெள்ளரி வியாபாரி. அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன், 32; சிபிசக்கரவர்த்தி, 34. இருவரும் ராஜாவிடம் வேலை செய்கின்றனர். மூவரும் நேற்று, விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் உள்ள விவசாயிகளிடம் வெள்ளரி பயிரிட பணம் பட்டுவாடா செய்ய, 'ஸ்கார்பியோ' காரில் சென்றனர்.

காலை 8:00 மணிக்கு, திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் ஏரிக்கரை அருகே வந்தனர். பின்தொடர்ந்து, மூன்று பல்சர் பைக்குகளில் வந்த எட்டு பேர் கும்பல், காரை வழிமறித்து நிறுத்தினர்.கார் கண்ணாடியை உடைத்து ராஜாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, 30 லட்சம் ரூபாயை பறித்து தப்பிச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement