dinamalar telegram
Advertisement

சாம்பிராணி ஆலையில் தீ

Share
Tamil News
சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பூண்டி, தோட்டப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி, 40; அதே பகுதியில் சாம்பிராணி தொழிற்சாலை நடத்தி வருகிறார். 100க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், தகர ஷீட் அடிக்கப்பட்ட குடோனில் திடீரென தீ பிடித்தது. 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். விபத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement