dinamalar telegram
Advertisement

வழக்கிலிருந்து விடுவிக்க அமைச்சர்கள் மனு : ஸ்ரீவி., நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாதம்

Share
ஸ்ரீவில்லிபுத்துார்:வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரி தமிழக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனு மீது, ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றது.

முந்தைய தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தற்போதைய அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதிலிருந்து விடுவிக்க கோரி அமைச்சர்கள் இருவரும் மனு செய்திருந்தனர்.

ஆகஸ்ட் 27 அன்று அமைச்சர்கள் தரப்பில் தி.மு.க., எம்.பி., இளங்கோ ஆஜராகி வாதாடினார். பதிலளிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் அழகர் கால அவகாசம் கேட்டார். வழக்கு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வழக்கறிஞர்களும் வாதாடினர். பின்னர் வழக்கு விசாரணையை அக்.23க்கு முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் ஒத்திவைத்தார். ஆஜராக அமைச்சர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement