dinamalar telegram
Advertisement

ரூ.346 கோடி டெண்டர் முறைகேடு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

Share
கோவை:கோவை மாநகராட்சியில், 346 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் இரண்டாம் கட்ட விசாரணையை துவக்கியுள்ளனர்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கோவை மாநகராட்சியில், 346 கோடி ரூபாய்க்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக, பொறியியல் பிரிவு உயரதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார், ஏற்கனவே முதல்கட்ட விசாரணை நடத்தினர்.

இரண்டாம் கட்டமாக, கடந்த ஆட்சி காலத்தில், மாநகராட்சி எல்லைக்குள் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மண்டலம் வாரியாக பெற்றுள்ளனர். சோதனைக்கு உள்ளான ஒப்பந்த நிறுவனங்களுக்கு, தேர்தலுக்கு முன், எவ்வளவு தொகை விடுவிக்கப்பட்டது; ஏன் விடுவிக்கப்பட்டது என்பது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர்.

சில பணிகள் குறித்த ஆவணங்களை கைப்பற்றியுள்ள அவர்கள், அதிலுள்ள தகவல்களை விசாரிக்கின்றனர். உதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி, இளம் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள், கணக்கு பிரிவினர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து, விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement