dinamalar telegram
Advertisement

ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை

Share
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்துார் லட்சுமிபுரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் அழகுமலை 45, வெட்டி கொலை செய்யப்பட்டார்.

வேம்பத்துார் லட்சுமிபுரம் படிவாசகம் மகன் அழகுமலை. சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் சொந்த ஊர் வந்திருந்தார்.உறவினர்களுடன் சொத்து பிரிப்பது சம்பந்தமாக தகராறு இருந்துள்ளது.நேற்று மதியம் ராஜா, சுந்தரம் உள்ளிட்ட உறவினர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த ராஜா , சுந்தரம் இருவரும் வெட்டியதில் அழகுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருப்பாச்சேத்தி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஏழுமலை விசாரிக்கின்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement