dinamalar telegram
Advertisement

பெண்ணை தாக்கியவர் கைது

Share
தேவகோட்டை : தேவகோட்டை அழகாபுரி நகர் இரண்டாவது வீதியைச் சேர்ந்த சந்தானம் மகள் பானுப்பிரியா. 21., இவருக்கும் தேவகோட்டை அருகே கோட்டூரை சேர்ந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றும் துரைராஜ் மகன் பிரபு 27.,விற்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில் பிரபு குடும்பத்தினர் மறுத்து விட்டதால் திருமணம் நடைபெறவில்லை.

மறுத்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பானுப்பிரியா போலீசில் புகார் செய்தார். வீட்டிற்கு சென்ற பானுப்பிரியா,அவரது தாயாரை பிரபு மற்றும் அவரது தாயார் மணிமேகலை, மற்றும் கணபதி ஆகியோர் மறித்து போலிசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்குமாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பெண் வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிவு செய்து பிரபுவை போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement