dinamalar telegram
Advertisement

நீட் ரத்து முடியவே முடியாது இப்ராஹிம் திட்டவட்டம்

Share
Tamil News
ஊட்டி:''நீட் தேர்வை தி.மு.க.,வால் எக்காலத்திலும் ரத்து செய்ய முடியாது,'' என, பா.ஜ., தேசிய சிறுபான்மை அணி செயலர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ., மற்றும் நீட் தேர்வை எதிர்த்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசை கண்டித்து, ஊட்டியில் பா.ஜ., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், இப்ராஹிம் பேசியதாவது:

மத்திய அரசை குறை கூறுவதை தி.மு.க., வழக்கமாக கொண்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வது தான் என் முதல் கையெழுத்து என, ஸ்டாலின் கூறினார். எக்காலத்திலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது.சி.ஏ.ஏ., மற்றும் நீட் தேர்வு குறித்து மக்களிடம் தவறான தகவலை பரப்பி, பொய், புரட்டு சொல்லும் தி.மு.க.,வுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

மாநிலத்தில், கடந்த ஆண்டில் 1.16 லட்சம் மாணவ - மாணவியர் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அரசு பள்ளியில் படித்த பல மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

  • Srivatsan Krishnamachari - Hyderabad,இந்தியா

    இந்த நீட் தேர்வு சட்டம் கொண்டுவந்தது அன்றய தி மு க வும் அங்கம் வகித்த "ஐக்கிய முற்போக்கு அணி" அதில் நான்கு கேபினட் அமைச்சர்கள் திமு க கட்சி. மற்றும் இரண்டு இணை அமைச்சர்கள். அப்போது இவர்கள் வாய் திறக்க வில்லை. இன்று திமுகவினர் கூத்து அடிக்கிறார்கள். ஐயோ பாவம் தமிழ் நாடு மாணவர்கள்.

  • sankar - Nellai,இந்தியா

    நீட் வேண்டாம் - நூறு சதவீத மாணவர்களையும் டாக்டர் ஆக்கிடுங்க (பிராமணர்களை தவிர)

  • Govind - Bangalore,இந்தியா

    ஐயா வேலூ இப்ராஹிம் அவர்களே வாழ்த்துகள். அருமை உங்கள் தொண்டு. தமிழக மக்களுக்கு நன்கு புரியுமாறு எடுத்து கூறுங்கள். தமிழக மக்கள் பொய் சொல்பவனை தான் நம்புகிறார்கள். அது ஏனோ தெரியவில்லை. பொய் சொல்பவர்கள் நிறைய உழைக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இந்த திராவிட காரர்கள் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்களே என்று நினைத்தாள் கஷ்டமாக இருக்கிறது. Reservation ஸ்கூல் சிலபஸ் என்று எல்லாவற்றிலும் விளையாட ஆரம்பித்து விட்டார்கள். தமிழக மக்களே உஷார்.

  • shan - sydney,ஆஸ்திரேலியா

    கூப்புடுங்க ...

  • Sandru - Chennai,இந்தியா

    வாங்குன காசுக்கு மேலே கூவுரியே இப்ராஹிம்.

Advertisement