dinamalar telegram
Advertisement

கமுதியில் 52 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

Share
கமுதி : கமுதி முழுவதும் 52 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை ராமநாதபுரம் எஸ்.பி. கார்த்திக் துவக்கி வைத்தார்.

கமுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் வகையில் 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்தது.முறையாக பராமரிக்கப்படாததால் கேமராக்கள் பழுதடைந்து காட்சிப்பொருளாக இருந்தது.தற்போது கமுதி பஸ் ஸ்டாண்ட், பஜார், சந்தை பேட்டை உட்பட 52 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு புதிய கட்டுப்பாட்டு அறையை ராமநாதபுரம் எஸ்.பி. கார்த்திக் துவக்கி வைத்தார்.

கிளாமரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புறக்காவல் நிலையமும் திறக்கப்பட்டது. டி.எஸ்.பி. பிரசன்னா, இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசம் உட்பட போலீசார் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement