dinamalar telegram
Advertisement

வீடு புகுந்து ரூ.2 லட்சம் நகை, பணம் திருடியவர் கைது

Share
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் வீடு புகுந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் அருகே காருகுடி வடக்கு தெருவில் வசிப்பவர் இருளாண்டி 66. இவரதுஇரண்டு மகள்கள் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர். இருளாண்டி மனைவியுடன் தனியாக வசிக்கிறார். இவர்களுக்கு சொந்தமாக 100 செம்மறி ஆடுகள் உள்ளன.இருளாண்டிக்கு வயதான நிலையில், ஆடுகளை அதே பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் 47, மேய்த்து வந்தார். நேற்று முன்தினம் இருளாண்டியும், அவரது மனைவியும் வீட்டில் இல்லாத போது வீட்டின் கதவை திறந்து உள்ளே பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 6 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் பணத்தை முத்துராமலிங்கம் திருடிச்சென்றார்.கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து முத்துராமலிங்கத்தை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement