dinamalar telegram
Advertisement

கமுதி அருகே வினோத முறையில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Share
கமுதி : கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகுவள்ளி அம்மன் கோயிலில்பக்தர்கள் வினோத முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இக் கோயிலில் ஆவணி முளைப்பாரி விழா நடந்தது. இதனையொட்டி பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து நேர்த்தி செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியாக காலை 7:00 மணிக்கு பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 5:00 மணிக்கு கடந்தாண்டு கோரிக்கை வைத்து நிறைவேறிய பக்தர்கள் வினோத முறையில் சாக்கு வேடம் அணிந்து பிள்ளையார் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். அழகுவள்ளி அம்மனுக்குஅபிேஷகம், சிறப்புபூஜை நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement