dinamalar telegram
Advertisement

ஆர்.எஸ்.மங்கலத்தில் விதை நெல் விற்பனை

Share
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம்வட்டாரத்தில் 20 ஆயிரத்து 400 எக்டேர் பரப்பளவில், ஆண்டு தோறும் நெல் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில், உயர் விளைச்சல் நெல் ரகங்களான, ஆர்.என்.ஆர்., டி.கே.எம் 13, என்.எல்.ஆர்., பி.பி.டி., உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

நடப்பாண்டில் ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை விரிவாக்க மையத்தில், மேற்கண்ட நெல் விதைகள் 94 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில், 62 மெட்ரிக் டன் நெல் விதைகள் 50சத மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், வேளாண்மை இயக்கம் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்ட பயனாளிகளுக்கு, நெல் சான்று விதைகள், திரவ உயிர் உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்ட உரங்கள், ஆகியவற்றை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சைலஸ் தலைமையில், யூனியன் தலைவர் ராதிகா வழங்கினார். இதில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் கண்ணையா, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement