dinamalar telegram
Advertisement

கெட்டுப்போன 450 கிலோ மீன் அழிப்பு 21 கடைகள் மீது நடவடிக்கை

Share
Tamil News
ஊட்டி : ஊட்டியில், கெட்டுப் போன, 450 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது.ஊட்டியில், மீன் மார்க்கெட், மெயின்பஜார், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன, ரசாயன தடவிய மீன்கள் விற்கப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.


நேற்று, நீலகிரி உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகம் மாவட்ட அலுவலர் சுரேஷ் மற்றும் மீன் வளத்துறை உதவி இயக்குனர் கணேச நேரு ஆகியோர் தலைமையில் குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், 40 சதவீதம் மீன் கடைகளில், கெட்டுபோன, ரசாயன தடவிய மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்தது. கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தனர்.நீலகிரி உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் மாவட்ட அலுவலர் சுரேஷ் நிருபர்களிடம் கூறுகையில், ''கெட்டுப் போன, ரசாயன தடவிய மீன்கள், 450 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. 10 கடைகளுக்கு விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. 11 கடைகள் உரிமம் இல்லாமல் மீன் விற்றது உள்ளிட்ட காரணங்களுக்காக, 46 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement