dinamalar telegram
Advertisement

பரமக்குடி அரசு பள்ளி பிளஸ் 2 மாணவனுக்கு கொரோனா உறுதி; ஆசிரியர்கள் உட்பட 20 பேருக்கு பரிசோதனை

Share
பரமக்குடி : பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. தொடர்ந்து ஆசிரியர்கள் உட்பட 20 பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரை வகுப்பு நடக்கிறது. 267 மாணவர்கள், 29 ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.பாம்பூர் ஊராட்சி பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவனுக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல்,இருமல், சளிஇருந்துள்ளது.மாணவர் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொண்டதன் பேரில் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

நேற்று மதியம் அந்த மாணவனின் வகுப்பில்உள்ள சக மாணவர்கள் 11 பேர் மற்றும் 4 ஆசிரியர்களுக்கும் பள்ளி வளாகத்தில் டெஸ்ட் எடுக்கப்பட்டது. மேலும் 5 மாணவர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்துள்ளனர்.தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளியில் வகுப்பு தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மட்டும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என, தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement