dinamalar telegram
Advertisement

மீன்பிடி திருவிழா: 15 பேர் மீது வழக்கு

Share
Tamil News
கள்ளக்குறிச்சி:மணிமுக்தா அணையில் நடந்த மீன்பிடி திருவிழாவில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துஉள்ளனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மணிமுக்தா அணையில் கடந்த ஆண்டு மீன் குஞ்சுகள் விடப்பட்டன. மீன்கள் வளர்ச்சி அடைந்த பின், குத்தகைதாரர்கள் பிடித்து விற்பனை செய்தனர். அணையில், தற்போது தண்ணீர் வற்றி வரும் நிலையில், நேற்று மீன்பிடி திருவிழா நடப்பதாக தகவல் பரவியது.

பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெரியவர்கள், சிறியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் நேற்று அதிகாலை 5:30 மணியளவில் அணையில் திரண்டனர்.கொரோனா தொற்று பரவலை மறந்து, முக கவசம் மற்றும் சமூக இடைவெளி இன்றி, அணையில் இறங்கிய மக்கள் ஒன்று கூடி மீன் பிடித்தனர். பல்வேறு ரக மீன்களைப் பிடித்து அள்ளிச் சென்றனர்.கொரோனா தொற்று ஏற்படும் வகையில், கூட்டம் கூடியதாக மீனவர் சங்கத் தலைவர் மணி உட்பட 15 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement