dinamalar telegram
Advertisement

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த கைதிகள்: எஸ்.ஐ., புகார்

Share
பரமக்குடி : உச்சிப்புளி போலீஸ் எல்லைக்குட்பட்ட கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மதுரை சிறையில் உள்ளனர். நாகாச்சி கார்த்திக், 25, மரவெட்டி வலசை தினேஷ், 24, மணிமாறன், 23, சங்கந்தியான் வலசை திருஞானம், 23, ஆகியோரை ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில்ஆஜர் செய்ய மதுரையிலிருந்து, ராமநாதபுரம் சிறப்பு எஸ்.ஐ., தாசன் உள்ளிட்ட போலீசார் அழைத்து வந்தனர்.

பரமக்குடி அருகே தெளிசாத்த நல்லுார் நான்கு வழி சாலையில் பஸ் வந்தபோது கார்த்திக், பஸ்சின் பக்க கண்ணாடியை உடைத்துள்ளார். தொடர்ந்து உடைந்த கண்ணாடித் துண்டுகளால் நால்வரும் தங்களது முழங்கைகளில் கீறி காயத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.சிறப்பு எஸ்.ஐ., தாசன் புகாரின் பேரில், பரமக்குடி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் விசாரிக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement