dinamalar telegram
Advertisement

குடியிருப்பு வசதியில்லாததால் போலீசார் அவதி

Share
திருவாடானை : குடியிருப்பு வசதி இல்லாததால் போலீசார் அவதிப்படுகின்றனர்.

திருவாடானையில் பணிபுரியும் போலீசாருக்கு தாலுகா அலுவலகம் அருகே குடியிருப்பு இருந்தது. பாழடைந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வீடுகளும் இடிக்கப்பட்டது. ஆனால் புதிதாக குடியிருப்புகள் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த சப்-டிவிஷனில் உள்ள தொண்டி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி ஆகிய போலீசார்களுக்கு புதிதாக குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் திருவாடானையில் மட்டும் குடியிருக்க வசதியில்லை.

தாலுகா தலைமையிடமான இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர். வெளிமாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் உள்ளனர். அவர்கள் தற்போது வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர்.பெரும்பாலான போலீசார்சில மாதங்கள் மட்டும் பணியாற்றிவிட்டு குடியிருப்பு வசதியில்லாததால் வேறு ஊர்களுக்கு மாறுதல் வாங்கி சென்று விடுகின்றனர்.ஆகவே குடியிருப்பு வசதி ஏற்படுத்த அதிகாரிகள்நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement