dinamalar telegram
Advertisement

அக்.9ல் உள்ளாட்சி தேர்தல்; தயாராகும் ஓட்டுப்பெட்டிகள்

Share
ராமநாதபுரம் : மாவட்டத்தில் காலியாகஉள்ள ஒரு மாவட்டக் கவுன்சிலர் மற்றும் ஆறு ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 33 வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு வரும் அக்.,9ல் தேர்தல் நடைபெற உள்ளது.

பரமக்குடி போகலுார் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் ஒன்றும், ஒன்றியங்களில் கடலாடியில் எம்.கரிசல்குளம், ராமநாதபுரத்தில் சக்கரக்கோட்டை, திருப்புல்லாணியில் கொம்பூதி, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் ஏ.ஆர்.மங்கலம், திருவாடானையில் பழங்குளம், முதுகுளத்துார் மகிண்டி ஆகிய ஆறு ஊராட்சிகளில் தலைவர் பதவி காலியாக உள்ளன. இவ்விடங்களில் நேற்று முதல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சிகளில் வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ளது.

அக்., 9ல் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற உள்ளதால் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., தங்கப்பாண்டி முன்னிலையில் ஓட்டுப்பெட்டிகளை சரிபார்க்கும் பணி நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement