dinamalar telegram
Advertisement

50 அடி ஆழ கிணற்றில் மிதந்த ஆண், பெண் உடல்

Share
கோபி:கோபி அருகே, 50 அடி ஆழமுள்ள கிணற்றில், வாலிபருடன் பெண் உடல் கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம், கோபி கணேசம்புதுார் அருகே விவசாய தோட்டத்தில் உள்ள, 50 அடி ஆழ கிணற்றில் பெண் உடல் மிதப்பதாக, நேற்று காலை 8:00 மணிக்கு தகவல் பரவியது. கோபி போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்தனர். கிணற்றை சுற்றி ஆண், பெண் அணியும் செருப்பு, பர்ஸ், மொபைல் போன் மற்றும் பூச்சி மருந்து கிடந்தது. தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பெண் உடலை மீட்டனர். பின் கிணற்றில் தேடியபோது, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் கிடைத்தது.

விசாரணையில், வாலிபர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின், 21 என்றும், பனியன் கம்பெனி வைத்துள்ளதும், திருமணமாகவில்லை எனவும் தெரிந்தது. இறந்து கிடந்த பெண், திருப்பூரைச் சேர்ந்த தங்கமணி, 38, என தெரிந்தது. கணவரை பிரிந்து வாழும் தங்கமணிக்கு, இரு குழந்தைகள் உள்ளனர். அவர், அஸ்வின் கம்பெனியில், பணிபுரிந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தால் பூச்சி மருந்தை குடித்து, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement