dinamalar telegram
Advertisement

ஜனநாயக மாதர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Share
Tamil News
பெ.நா.பாளையம் : சின்னதடாகத்தில், ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாய தொழிலாளர்கள் சங்க, தடாகம் கிளை செயலாளர் புஷ்பா தலைமை வகித்தார்.இதில்,'100 நாள் வேலை திட்டத்தை, 200 நாளாக உயர்த்த வேண்டும். தினக்கூலியாக, 600 தர வேண்டும். 100 நாள் வேலையில், ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்துவதை கைவிட வேண்டும். இத்திட்டத்தை, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும், விரிவுபடுத்த வேண்டும்.

தடுப்பூசியை அனைவருக்கும், விரைவாக வழங்க வேண்டும். கோவிட் கால நிவாரணமாக, குடும்பத்துக்கு, 7,500 ரூபாய் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், நிகழ்ச்சியில், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், ராஜம்மாள், ஈஸ்வரி, ரங்கம்மாள், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட நிர்வாகி வனஜா, மாவட்ட குழு உறுப்பினர் விஜயா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement