dinamalar telegram
Advertisement

வாக்காளர் பட்டியலில் மனவளர்ச்சி குன்றியோர்

Share
ராமநாதபுரம் : பூத்தேந்தல் கிராமத்தில்உள்ள தனியார் மனநலகாப்பகத்தில் சிகிச்சை பெற்ற 86பேரை வாக்காளர் பட்டியலில் முறைகேடாக சேர்த்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து அவர்களது பெயர்களை நீக்குவதுதொடர்பாக தாசில்தார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., உத்தரவிட்டுள்ளார்.


திருவாடானை சட்டசபை தொகுதி பூத்தேந்தலில் தனியார் மனநலகாப்பகம் உள்ளது. இதன் நிர்வாகி தன்னை கார்டியனாக காட்டி, 86 பேருக்கு வி.ஏ.ஓ., ஓட்டுச்சாவடி அலுவலருக்கு தெரியாமல் வாக்காளர் அட்டை பெற்றுஉள்ளார். இவர்களில் சிலர் 2021 சட்டசபை தேர்தலில் ஓட்டளித்துள்ளனர். இதுதொடர்பாக பூத்தேந்தல் கிராம மக்கள் மற்றும் பா.ஜ.,வினர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.


மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவில் விசாரணை நடக்கிறது. இதில் 1950 சட்டப்பிரிவு 20(2)ன்படி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பெறும் இடம் அவர்களது நிரந்தர வசிப்பிடம் ஆகாது. பூத்தேந்தல் தனியார் மனநலகாப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்றவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கியதுதொடர்பாக விசாரிக்க தாசில்தாருக்கு ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., சேக் மன்சூர் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் கூறுகையில், 'மனவளர்ச்சி குன்றியவர்கள்வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு குறித்து விரிவாகவிசாரணை நடத்த ஆர்.டி., ஓ., உத்தரவிட்டுஉள்ளார். இதுதொடர்பானவிசாரணை நடந்துவருகிறது,' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement