dinamalar telegram
Advertisement

சிக்கன் கடைக்காரர் கொலை ஒரே குடும்பத்தில் 4 பேர் கைது

Share
ராணிபேட்டை:சிக்கன் கடைக்காரர் கொலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே தப்பூர் கோவிந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 45; சிக்கன் கடை வைத்துள்ளார். மனைவி கங்கா, 35. இவர்களுக்கு நான்கு மகள்கள், இரு மகன்கள் உள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 75; விவசாயி. மனைவி கிருஷ்ணவேணி, 65, மகன்கள் உமேஷ், 35, அன்பு, 32; அங்கு டிபன் கடை நடத்தி வருகின்றனர்.

ரங்கநாதன், கிருஷ்ணன் இடையே நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு மீண்டும் மோதல் நடந்தது. இதில், கிருஷ்ணன் குடும்பத்தினர் கட்டையால் தாக்கியதில் ரங்கநாதன் இறந்தார்.பாணாவரம் போலீசார், கிருஷ்ணன், அவரது மனைவி, இரு மகன்களை கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement