dinamalar telegram
Advertisement

விடுமுறை நாளிலும் வேட்புமனு தேர்தல் அறிவிப்பில் குளறுபடி

Share
Tamil News
அன்னுார் : வேட்புமனு தாக்கல் குறித்த, தேர்தல் அறிவிப்பு, தவறான தகவலுடன் வெளியிடப்பட்டுள்ளது.

அன்னுார் ஒன்றியத்தில், மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது.அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக அறிவிப்பு பலகையிலும், 15 ஊராட்சி அலுவலகங்களிலும், தேர்தல் அறிவிப்பு ஒட்டப்பட்டது.இதில், வேட்பாளரோ அல்லது அவரது பெயரை முன்மொழிபவரோ, செப். 15 முதல், 22ம் தேதி வரை, அரசு விடுமுறை அல்லது யாதொரு நாளிலும் முற்பகல் 10:00 முதல்பிற்பகல் 5:00 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாக அரசு விடுமுறை நாளில், வேட்புமனு பெறுவதில்லை. அரசு விடுமுறை அல்லாத யாதொரு நாளிலும் என்று பிரசுரிப்பதற்கு பதில், அரசு விடுமுறை அல்லது யாதொரு நாளிலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என, தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி விடுமுறை நாளன்று மனு தாக்கல் செய்யலாம் என, பொருள்படுகிறது.இந்தத் தவறு குறித்து உதவி தேர்தல் அலுவலர் முத்துக்குமாரசாமியிடம் கேட்டபோது, ''இந்த தவறு சரி செய்யப்படும்'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement