dinamalar telegram
Advertisement

ரயில் இன்ஜினில் மனித தலை

Share
அரக்கோணம்: அரக்கோணம் வந்த ரயில் இன்ஜினில், மனித தலை இருந்ததால், பயணியர் அதிர்ச்சி அடைந்தனர்.

அசாம் மாநிலம், கவுகாத்தியில் இருந்து, கர்நாடக மாநிலம், பெங்களூரு செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6:30 மணிக்கு அரக்கோணம் ஸ்டேஷன் முதலாவது பிளாட்பாரம் வந்தது.ரயில் இன்ஜின் முன் பகுதியில், ஒரு ஆணின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் ரத்தம் சொட்டியபடி இருந்தது. இதைப் பார்த்த பயணியர் அலறியடித்து ஓடினர்.

இது குறித்து, அரக்கோணம் ரயில்வே போலீசார் கூறியதாவது:சென்னை பெரம்பூர் - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயிலில் சிக்கி இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்திருக்கலாம். உடலை போலீசார் தேடி வருகின்றனர்; அவர் சென்னையைச் சேர்ந்தவரா என பின்னர் தான் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement