dinamalar telegram
Advertisement

மூதாட்டியிடம் செயின் பறித்த மூன்று பேர் கைது

Share
அன்னுார் : அன்னுார் அருகே, தெலுங்குபாளையத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் பார்வதி, 77. கடந்த வாரம், இவரது கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், பொருள் வாங்குவது போல நடித்து, பார்வதியின் கழுத்தில் இருந்த ஐந்து சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

போலீசார் 'சிசி' கேமரா வாயிலாக காட்சிகளை ஆய்வு செய்து, மூவரையும் அடையாளம் கண்டனர்.தீவிரமாக தேடி வந்த போலீசார், ரோந்து சென்றபோது, அவர்களைப் பிடித்தனர்.இதில், ஒருவன் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மாரீஸ்வரன், 26; காரமடையில் மீன் கடையில் வேலை பார்க்கிறான். இவன் மீது ஏற்கெனவே, காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையத்தில் 12 வழக்குகள் உள்ளன.இவனுடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கும் 15 மற்றும் 17 வயது என்பதால், அவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement