dinamalar telegram
Advertisement

கோவில் கட்டுமான பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

Share
Tamil News
தர்மபுரி:ஊர் பொது வழியில் கோவில் கட்டுவதாக கூறி, கட்டுமான பணியை வருவாய்த் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

தர்மபுரி அருகே, குண்செட்டிஹள்ளியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்கள் ஊர் மையத்தில், கல்லால் ஆன சுவாமி வைத்து, பல ஆண்டுகளாக வழிபட்டு வந்தனர். இங்கு கோவில் கட்ட, சமீபத்தில் சிமென்ட் பில்லர் அமைத்தனர்.ஊர் பொது வழியான அந்த இடத்தில் கோவில் அமைக்கக் கூடாது என, கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.

இதையடுத்து தர்மபுரி தாசில்தார் ராஜராஜன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், சிமென்ட் பில்லர்களை பொக்லைன் மூலம் அகற்றி, ‍கோவில் கட்டுமான பணியை நிறுத்தினர்.ஊர் மக்கள் கூறுகையில், 'தவறான தகவலால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாங்கள் கொடுத்த மனுவுக்கு நீதி கிடைக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவோம்' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Darmavan - Chennai,இந்தியா

    சர்ச் மசூதி காட்டும் பொது எங்கோ போய்விடுவார்கள்.ஹிந்து எதிரி அரசு.கேட்க நாதியில்லை/

Advertisement