dinamalar telegram
Advertisement

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கலெக்டர்களுடன் ஆலோசனை

Share
Tamil News
சென்னை :நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வகையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை
நடத்தினர்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், அக்., 6, 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தல் முடிந்த கையுடன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான கலெக்டர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.
'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணைய செயலர் சுந்தரவல்லி, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பிரவீன் நாயர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

378 பேர் மனு தாக்கல்



ஒன்பது மாவட்ட தேர்தலுக்கான மனு தாக்கல் நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கி, மாலை 5:00 மணி வரை நடந்தது. முதல் நாளிலேயே 378 பேர் ஆர்வமுடன் மனு தாக்கல் செய்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement