dinamalar telegram
Advertisement

பரிசல் கவிழ்ந்து மாணவி பலி

Share
திண்டுக்கல்:தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே நடகோட்டையைச் சேர்ந்த மணிமுத்து மகள் முத்துவர்ஷினி, 12; ஏழாம் வகுப்பு படித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம், தர்மத்துப்பட்டியில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்தார்.

நேற்று கோம்பை அருகே கண்மாயில் மீன் வாங்குவதற்காக, உறவினர் ரத்தினசாமி, 42, உறவினர் குழந்தைகள் தர்ஷினி, 10, வர்ஷினிகா, 5, முத்துவர்ஷினி சென்றனர். மூன்று சிறுமியரையும் பரிசலில் கண்மாய்க்குள் ரத்தினசாமி அழைத்துச் சென்றார். பரிசல் திடீரென கவிழ்ந்ததில், தண்ணீரில் மூழ்கிய மூன்று சிறுமியரும் மீட்கப்பட்டனர். முத்துவர்ஷினி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement