dinamalar telegram
Advertisement

சிறப்பு டி.ஜி.பி., பாலியல் வழக்கு 27க்கு விசாரணை ஒத்திவைப்பு

Share
விழுப்புரம்:பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., - எஸ்.பி., மீதான விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி கடந்த பிப்ரவரி மாதம் அளித்த புகார்படி சிறப்பு டி.ஜி.பி., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இது தொடர்பாக, சிறப்பு டி.ஜி.பி., மீதும் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை மிரட்டி கார் சாவியைப் பறித்த, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் மீதும், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர்.

குற்றப்பத்திரிகை



இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணைக்கு, சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி., கண்ணன் ஆகியோர் ஆஜராகினர்.சிறப்பு டி.ஜி.பி., தரப்பு வழக்கறிஞர், 'உளுந்துார்பேட்டை - செங்கல்பட்டு வரை குற்றம் நடைபெற்றதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

'எனவே, இவ்வழக்கை உளுந்துார் பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் நடத்த வேண்டும். இங்கு விசாரிக்கக் கூடாது' என வாதிட்டார்.

நீதிபதி கோபிநாதன், ''விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் சேர்த்து, விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனால், இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கிறது,'' என்றார்.

அதிகாரம் உள்ளது



அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன், ''சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், இவ்வழக்கை விசாரிக்க விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது,'' என்றார்.இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி கோபிநாதன், விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement