dinamalar telegram
Advertisement

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு ஆன்லைனில் மோடி பங்கேற்பு

Share
புதுடில்லி:தஜிகிஸ்தானில் நாளை துவங்கும் எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, 'ஆன்லைன்' வாயிலாக பங்கேற்று உரையாற்றுகிறார்.
ரஷ்யா, சீனா, தஜிகிஸ்தான் உள்ளிட்ட எட்டு நாடுகளை சேர்ந்த அதிபர்களால், 2001ல் எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான், 2017ல் நிரந்தர உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.


ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் வருடாந்திர உச்சி மாநாடு, மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நாளை துவங்குகிறது.
இந்த கூட்டத்திற்கு, தஜிகிஸ்தான் அதிபர் இமோமாலி ராஹ்மோன் தலைமை வகிக்கிறார். இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு, தலைமை வகிக்கும் பிரதமர் மோடி, 'ஆன்லைன்' வாயிலாக கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த
உச்சி மாநாட்டில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் பங்கேற்கிறார். இதில், ஆப்கான் விவகாரம் உட்பட, சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Sandru - Chennai,இந்தியா

    தலைவா ஷாங்காய் ரயில் நிலையத்தில் உள்ள டீ கடையில் நீங்கள் வேலை பார்த்ததை மறக்காமல் குறிப்பிடவும்.

Advertisement