dinamalar telegram
Advertisement

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டெஸ்ட் தொற்று இல்லாததால் நிம்மதி

Share
பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு நடந்த தொற்று பரிசோதனையில், அனைவருக்கும் 'நெகட்டிவ்' என, பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில், தொற்று தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், கடந்த 1ம் தேதி முதல், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, சுழற்சி முறையில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு, நடந்து வருகின்றன.'பள்ளி வளாகத்தை, துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதைப் பள்ளி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.பள்ளிக்கு வரும் மாணவர்களை வெப்ப பரிசோதனைக்கு பின், வகுப்புகளுக்குள் அனுமதிக்க வேண்டும். இது தொடர்பான பதிவேடுகளை பராமரிக்கவேண்டும்.

தொற்று அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரக்கூடாது. அனைத்து ஆசிரியர்களும், தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசின், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 9, 10ம் வகுப்புகள் நடந்து வருகின்றன.

இங்கு பயிலும் மாணவ, மாணவியர், 95 பேருக்கு, தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில், யாருக்கும் தொற்று இல்லை 'நெகட்டிவ்' என, பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில்,' மாணவர்களுக்கு தொற்று இல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து, தமிழக அரசின் கோவிட் தொற்று வழிகாட்டு நெறிமுறைகள், முறையாகப் பின்பற்றப்படும்' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement