dinamalar telegram
Advertisement

மக்கள் பிரச்னைகளுக்கு மாவட்ட அளவில் தீர்வு : கலெக்டர்களுக்கு தலைமை செயலர் கடிதம்

Share
Tamil News
'மாவட்ட நிர்வாகம், மக்களுடைய பிரச்னைகளை, மாவட்ட அளவிலேயே, துரிதமாக தீர்க்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:மாவட்ட கலெக்டர் என்ற மகத்தான பொறுப்பில் இருக்கும் இளம் நண்பர்களே... அரசு நடவடிக்கைகளுக்கு புத்துயிர் பாய்ச்ச வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசு உங்களை நியமித்திருக்கிறது.'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற திட்டத்தின் வழியே பெற்ற மனுக்கள் மீது, 100 நாட்களில் எடுத்த நடவடிக்கைகளையும், வெகு நாளாக நீடித்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டதையும் பார்த்து, மக்கள் அளவு கடந்த நம்பிக்கையில் இங்கு குவிகின்றனர்.

சாத்தியமில்லைபோர்க்கால அடிப்படையில், அலுவலர்கள் அந்த மனுக்களை அணுகியதால், அனைத்து மனுக்களுக்கும் விடிவு கிடைத்தது. அதேபோல், அனைத்து நேர்வுகளிலும் நாம் செயல்படுவது சாத்தியமில்லை. ஒரே நாளில், 10 ஆயிரம் மனுக்கள் குவிகின்றன. முத்துகுளிக்க மூச்சுப்பிடித்தவன், அதைப்போலவே எல்லா நேரங்களிலும், செயல்பட முடியாது. இந்த மனுக்கள் ஏன் இங்கு வந்து குவிகின்றன என்பதை, நாம் சிந்திக்க வேண்டும். மாவட்டம், வட்டம், வட்டாரம், சிற்றுார் அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளை, உரிய காலத்தில் செய்யாமல் இருப்பதால், அவர்கள் கோட்டையை நோக்கி வருகின்றனர். கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும், அவர்கள் காத்துக் கிடப்பதை பார்க்கும்போது மனம் கனக்கிறது.

'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்திலும், மனுக்கள் மீதும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டது நீங்கள் தான். கோட்டையில் இருந்து கூறியதும் பிறப்பித்த ஆணையை, குக்கிராம அளவிலேயே ஏன் முடிக்காமல் விட்டோம் என்பது ஆய்வுக்குட்பட்ட செயல்.மூன்று மாதங்களாகப் பட்டா மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, எனக்கு குறுஞ்செய்தி வந்தது. சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரை அழைத்து அனுப்பியதும், 'படபட'வென பட்டா மாற்றம் நடந்தது. பட்டா பெற்றவர், படித்து பட்டம் பெற்றபோது கூட, அவ்வளவு மகிழ்ந்திருக்க மாட்டார்.மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரச்னைகளை, மாவட்ட அளவிலேயே, துரிதமாக தீர்க்க முனைய வேண்டும். முனைப்பாக செயல்பட்டால், அவர்கள் தலைமை செயலக கதவுகளை தட்ட வேண்டிய தேவை எழாது.இதை மனதில் வைத்து, எல்லா அலுவலர்களுக்கும், இது குறித்த விழிப்புணர்வை நீங்கள் ஏற்படுத்த வேண்டும்.

முன்மாதிரிதலைமை செயலரின் கடிதத்தை படிக்கிற அதே ஆர்வத்துடன், தத்தளிக்கின்ற அபலையின் மனுவை படிப்பதில், நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.இலக்குகளை அடைவது மட்டுமல்ல; மக்கள் இதயங்களை குளிர்விப்பதும், அரசுப் பணியின் ஓர் அம்சமே. விரிவான ஆய்வின் வழியே, அந்தந்த அளவிலேயே, பிரச்னைகள் தீர்க்கப்படும் நடைமுறையை, நீங்கள் ஏற்படுத்தினால், சமூகத் தேவைகளுக்கும், கட்டமைப்புகளுக்கும் மட்டுமே, மக்கள் உங்களை நாடி வருவர்.

வெற்றி பெறுவோம்அதிக மனுக்களை தீர்த்து வைக்கிற, மாவட்ட கலெக்டருக்கு கேடயங்கள் வழங்குவதை விட, தலைமை செயலகத்திற்கு, எந்த மாவட்டத்தில் இருந்து குறைவான மனுக்கள் வருகிறதோ, அந்த மாவட்டத்திற்கு அளிக்கும் நடைமுறையை கொண்டு வரும் அளவுக்கு, உயர
உயரப் பறக்கும் பறவையைப் போல், உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்; வெற்றி பெறுவோம்.இவ்வாறு இறையன்பு கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சரியான தேர்வு தான் இந்த தலைமைச் செயலர் இறையன்பு. பாராட்டுக்கள்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பத்து வருடங்களுக்கு பட்ட கஷ்டங்கள் எல்லாம் இந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் ஆட்சி யில் தீர்க்கப்படுகிறது. அதனால் தான் எதிரிகளும் இவரை விடியல் தலைவர் தான் என்று சொல்கிறார்கள். வாழ்க. வளர்க. பாராட்டுக்கள்.

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  யேசப்பா உங்களை காப்பர், ஆமென்

 • CBE CTZN - Coimbatore,இந்தியா

  மிக சிறப்பான புரிதலுடன் மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  சொல்ல வந்த கருத்து பொது மக்களின் புகார்களை உடனடியாக தீர்த்துவையுங்கள் நாளுக்கு நாள் பாதிப்புக்கு உள்ளான மக்கள் முதல்வர் பிரிவுக்கு புகார் மட்டும் இல்லாமல் நேரிலும் வரும் அளவுக்கு நடந்து கொள்ளக்கூடாது இதுதான் சொல்லவந்த செய்தி, தற்போது புத்தகம் எழுத நேரம் இல்லாததால் கடிதத்தை ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார், இதே போன்று விலாவரியாக நேரில் சென்றோ அல்லது கடிதம் அனுப்பினாலோ இவர் கேட்ப்பாரா அல்லது படிப்பாரா ? சுருங்கக்கூறி விளங்கவைத்தால் நன்றாக இருக்கும். வந்தே மாதரம்

Advertisement