dinamalar telegram
Advertisement

பருவ மழை முன்னெச்சரிக்கை பணிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு

Share
சென்னை:சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக, நீர்வளத் துறைக்கு, 11.8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்களில், அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு, ஆரணியாறு, வெள்ளாறு, கொள்ளிடம், புழல் ஏரி உபரிநீர் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித் தடங்கள், மழைக்கு முன்னதாக துார் வாரப்படுகின்றன.

இந்தாண்டு இப்பணிகளை மேற்கொள்ள, 11.7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் துார்வாருவதை 95 பணிகளாக பிரித்து மேற்கொள்ளப்பட உள்ளது. வடகிழக்கு பருவ மழை காலம் முடியும் டிச., இறுதிவரை பணிகளை மேற்கொள்ளும் வகையில், ஒப்பந்தம் செய்யப்பட்டு, துார் வாரும் பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement