dinamalar telegram
Advertisement

பிரசாரத்தை துவக்க அ.தி.மு.க., முடிவு

Share
Tamil News
அன்னுார் : மாவட்ட கவுன்சிலர் தேர்தல் பணியை உடனே துவக்க, அ.தி.மு.க., கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அன்னுார் தெற்கு, வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர், பழனிசாமி தலைமை வகித்தார்.கூட்டத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் பேசுகையில், 'மாவட்ட கவுன்சிலர் மூன்றாவது வார்டில், தொடர்ந்து மூன்று முறை அ.தி.மு.க.,வே வென்று, 15 ஆண்டுகளாக, தன் வசம் வைத்துள்ளது.அவிநாசி தொகுதியில், 41 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே தி.மு.க., வெற்றி பெற்றது.

எட்டு முறை அ.தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சிகள்தான் வெற்றி பெற்றுள்ளன.மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நடைபெறும் 15 ஊராட்சிகளில், 10ல் அ.தி.மு.க.,வினர் தலைவர்களாக உள்ளனர்.ஏழு ஒன்றிய கவுன்சிலர்களில், நான்கு பேர் அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள். எனவே, வெற்றி உறுதி. உடனடியாக தேர்தல் பணிகளை துவக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.கூட்டத்தில், அவிநாசி எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட செயலாளரை கலந்தாலோசித்து பிரசார திட்டம் வகுக்கவும், தேர்தல் பணியை உடனே துவக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

தெற்கு ஒன்றிய செயலாளர் சாய் செந்தில், மாணவரணி மாவட்ட செயலாளர் கோகுல், பாசறை மாவட்ட செயலாளர் வசந்த், வக்கீல் அணி மாவட்ட இணைச்செயலாளர் தினேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement