dinamalar telegram
Advertisement

உறைவிட நிதியாக ரூ.267 கோடி வசூல்

Share
சென்னை:கட்டுமான திட்ட அனுமதி வாயிலாக, 2020 - 21ம் நிதி ஆண்டில், 267 கோடி ரூபாய் உறைவிட நிதியாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ஏழை மக்களுக்கான குடியிருப்பு தேவை அதிகமாக இருப்பதால், அரசு நிதி போதுமானதாக இல்லை. இதனால், 2017ல் உறைவிட நிதி என்ற புதிய நடைமுறை துவக்கப்பட்டது. புதிய கட்டுமான பரப்பளவில் ஒரு பகுதிக்கான வழிகாட்டி மதிப்பு தொகை, உறைவிட நிதியாக வசூலிக்கப்படுகிறது.

இவ்வகையில், 2020 - 21ம் நிதி ஆண்டில், 266.93 கோடி ரூபாய் உறைவிட நிதியாக வசூலிக்கப் பட்டு உள்ளது. தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம் வாயிலாக இந்நிதி நிர்வகிக்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement