dinamalar telegram
Advertisement

சேதமடைந்த சாலையில் தற்காலிக சீரமைப்பு

Share
கூடலுார் : கூடலுார் அருகே, மாநில எல்லையில் உள்ள சாலையில் தற்காலிக சீரமைப்பு பணி நடந்தது.

தமிழக-கேரளா எல்லையில், கீழ்நாடுகாணி வரை, 6 கி.மீ., துார சாலை கூடலுாரில் உள்ளது.கேரளாவிலிருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு, நாடுகாணியில் மாவட்ட நிர்வாகம் சார்பில், வாகன நுழைவு வரி வசூல் செய்யப்படுகிறது. பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்காததால், ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள், பாறைபொடி கலந்து ஜல்லி கற்களை, குழிகளில் கொட்டி, தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். டிரைவர்கள் கூறுகையில், 'தற்காலிக பணிகள் நடந்தால், மழை காலத்தில் மீண்டும் சாலை மோசமாகும். இதனால், இப்பகுதியில் நிரந்தரமாக சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement